விடுதி அறையில் மாணவர் தற்கொலை ? பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை

0 1543

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மாணவர் ஒருவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே (( SBK )) மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழ கன்னிச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ்பாபு என்ற மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

வியாழக்கிழமை மதியம் உணவு இடைவேளைக்குச் சென்ற ஹரிஷ்பாபு மீண்டும் வகுப்புக்கு வரவில்லை. விடுதி அறையில் சென்று பார்த்தபோது, மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், மாணவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் ஹரிஷ்பாபு அடிக்கடி விடுதி சுவர் ஏறிக் குதித்து வெளியில் செல்வார் என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வாறு சென்றபோது ரோந்து காவலர் ஒருவரிடம் சிக்கியதாகவும் பள்ளித் தரப்பில் கூறப்படுகிறது.

அந்தக் காவலர் பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் கூறி மாணவரை கண்டிக்கச் சொன்னதாகவும் அதனையடுத்து மாணவரின் பெற்றோரை அழைத்து இனி அவர் இவ்வாறு செய்ய மாட்டார் என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பள்ளித் தரப்பு விளக்கத்தை மறுக்கும் ஹரிஷ்பாபுவின் பெற்றோர், அவரது சடலத்தை மீட்கும்போது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்ததாகவும் எனவே தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இரு தரப்பிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments