காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் சிலை சேதம்
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகேவுள்ள களியப்பேட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து பதற்றம் நிலவியது.
களியப்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே கடந்த 1998ம் ஆண்டு பெரியார் அமர்ந்திருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையின் முகம், கை பகுதி சேதப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை இருந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் உத்தரமேரூர் போலீஸார் சம்பவ இடம் வந்து, துணியை கொண்டு அதைமூடி மறைத்தனர். சிலையை சேதப்படுத்தியது யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவுவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெரியார் சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலையை சேதப்படுத்தும் சமூகவிரோத சக்திகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments