ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் புதர் தீ எதிரொலி
புதர்த் தீ பற்றி எரிந்துவரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக எரிந்துவரும் தீயால் கான்பெராவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பயணிகளின் நலன் கருதியும், தீயணைப்பு விமானங்களுக்கு இடையூறு இல்லாமல் வழிவிடும் நோக்கிலும் இங்குள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒரு சில விமானங்கள் மட்டும் புறப்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.
மேலும் புதர்த் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல வாரங்களாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்கும் பணியில், உள்ளூர் தீயணைப்பு படையுடன் இணைந்து அமெரிக்க வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கனட நிறுவனத்தின் சி 130 ஹெர்குலஸ் என்ற தீயணைப்பு விமானத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 3 வீரர்கள், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்
Comments