கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை - நீதிபதி

0 669

கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார்கள் தமிழில் எழுதிய 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தை பாடவேண்டும் என தென் கலை வைணவர்களும், சமஸ்கிருத வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும் என வடகலை வைணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதால், இரு தரப்பினரையும் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு பிணையப் பத்திரம் செலுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தென்கலை வைணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு, கருவறையில் இடமில்லை எனக் கூறிய நீதிபதி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, வடகலை வைணவர்களுக்கும், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளருக்கும், தேவராஜ ஸ்வாமி கோவில் செயல் அதிகாரிக்கும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments