ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ராமர் பாலத்தை பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கடல் நடுவே ஆங்காங்கு மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு அமைந்துள்ளது.
ராமர் பாலம் என்று குறிப்பிடப்படும், இந்த பகுதியில் சேது சமுத்திரம் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதனை பண்டையகால வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments