ஐஸ்வர்யாராய்க்கு என்னை விட கம்மி..! ராதிகா பொறாமை

0 2317

சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஒப்பிட்டு பேசி கலகலப்பூட்டினார்.

கரகாட்டகாரன் சினிமா கோவை சரளா பாணியில் சென்னை சேத்துபட்டில் நடந்த வானம் கொட்டட்டும் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதிகாசரத்குமார் பேசி உள்ளார்

இயக்குனர் மணிரத்ரனத்தின் படத்தில் பரத நாட்டிய கதாபாத்திரத்தில் நடித்து அவரை அழவைத்ததாக தெரிவித்த ராதிகா, தொடர்ந்து அவரது படங்களில் கதாநாயகியாக நடிக்க கூப்பிட்டதாகவும் , உலக அழகி ஐஸ்வர்யாராய் தன்னை விட 2 இன்ஞ் கம்மியாக இருந்ததால் அவரை கதாநாயகியாக்கி விட்டதாகவும் கூறி கலகலப்பூட்டினார்.

மேடையில் இளைய நாயகர்களை சின்னபுள்ளைங்க என்று பேசிய ராதிகாவிடம், அதான் வயசாகிடுச்சில்ல தாராளமாக சொல்லுன்னு கூறி சரத்குமார் கலகலப்பூட்டினார்.

ராதிகாவின் நகைச்சுவையால் அரங்கில் இருந்த இயக்குனர் மணிரத்னம், நாயகன் விக்ரம்பிரபு, சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்டபலரும் வாய் விட்டு சிரித்தனர். உலக அழகி ஆசை ,உள்ளூர் கிழவிகள் வரை வாட்டி எடுக்கும் போது நம்ம ஊர் கோடீசுவரிக்கு இல்லாமல் போகுமா..? என்பதே கூட்டத்தினரின் கமெண்டாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments