பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் 5 வது திருமணம்

0 1130

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5-வது திருமணம் செய்துள்ளார்.

பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன்,இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து,2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு, அதே ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் பமீலா ஆண்டர்சன் பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த 74 வயதான ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments