கொரோனா வைரஸால் சீனாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ரத்து

0 759

கொரோனா வைரஸ் பரவி வருவதால் சீனாவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானில் நடப்பாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால், வூகான் பகுதியில் கரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பெண்கள் கால்பந்து போட்டிகள் நான்ஜிங் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் குத்துச் சண்டை போட்டியை ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments