சென்னை ஸ்மார்ட் சிட்டி நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0 1245

சென்னை பாண்டி பஜாரின் நடைபாதையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை,  மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

image

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 48 கோடி ரூபாய் செலவில் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட, நடைபாதை வளாகம் மற்றும் சாலையை கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

image

இந்த நிலையில், அங்குள்ள சிறு, குறு கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு மட்டுமின்றி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகற்றினர்.

image

மேலும், இந்த செயல் மீண்டும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments