தமிழகத்தில் ஆண்டுக்கு, ஆண்டு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது என்றார்.
நாட்டிலேயே அதிகமாக உத்தரபிரதேசத்தில் 24, 181 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும்,மகாராஷ்டிராவில் 16,378 பேரும், மேற்கு வங்காளத்தில் 12,234 பேரும்,பீகாரில் 11,378 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், தமிழகத்தில்10,269 பேர் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சென்னை நகரிலும் மார்பக புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அடிக்கடி பரிசோதனை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
Comments