தூங்கா நகரமாகிறது மும்பை..!
மும்பை மாநகரம் வருகிற 27-ஆம் தேதி முதல் தூங்கா நகரமாக மாறுகிறது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது குடியரசு தினத்திற்கு அடுத்த நாளான 27-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள் மற்றும் மில் வளாகங்களில் உள்ள கடைகள், உணவகங்கள், தியேட்டர்கள் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றார்.
Comments