பாகிஸ்தான் மீண்டும், மீண்டும் வெறுக்கத்தக்க விதத்தில் பேசுகிறது - இந்திய துணை தூதர் நாகராஜ் நாயுடு
மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருவதாக ஐ.நா.வுக்கான இந்திய துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.
ஐ.நா பொதுச் சபையின் 74 ஆவது அமர்வில் உரையாற்றிய அவர், உலக அளவில் ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரச்சாரங்களை பரப்பி வருவதாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் குழு ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மன்றத்தில், இந்திய அரசு குறித்து விஷம் தோய்ந்த தவறான கதைகளை கூறி வருவதாக அவர் கூறினார். மீன் மீண்டும் மீண்டும் தண்ணீருக்கு செல்வதைப் போலவே, பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் வெறுக்க தக்க பேச்சை பேசுவதாக அவர் புகார் தெரிவித்தார்.
இந்தியாவுடன் சாதாரண உறவுகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சமூகத்தை உண்மையிலிருந்து பாகிஸ்தான் திசை திருப்புவதாக அவர் தெரிவித்தார்.
Comments