திருப்பதி கோவிலில் வருகிற 1-ஆம் தேதி ரத சப்தமி விழாவுக்கு ஏற்பாடு

0 1075

திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை- திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி, திருப்பதி கோவிலில் 1564-ம் ஆண்டில் இருந்து ரத சப்தமி விழா நடந்து வருகிறது என்றார்.

நடப்பு ஆண்டுக்காக விழா வருகிற 1-ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று ஒரே நாளில் உற்சவர் ஏழுமலையான் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் 7 வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளி கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வருவார் என்றும் அவர் கூறினார்.

விழா அன்று கோவிலில் சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments