நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம் கடைசி ஆசை குறித்து, திஹார் சிறை நிர்வாகம் கேட்டதாக தகவல்

0 992

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிர்பயா வழக்கு குற்றவாளிகளிடம்  கடைசி ஆசை குறித்து, திஹார் சிறை நிர்வாகம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான வினய் சர்மா, அக்சய் குமார் சிங், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய 4 பேரும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர்.

இப்படி தூக்கிலிடப்பட உள்ளவர்களின் கடைசி ஆசை நிறைவேற்றி வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, சொத்துகள் ஏதேனும் இருந்தால் அதை விருப்பப்பட்டவர் பெயரில் மாற்றி எழுதி வைப்பது உள்ளிட்டவை அனுமதிக்கப்படும்.

அந்த வகையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கடைசி ஆசை குறித்து 4 பேரிடமும் திஹார் சிறை நிர்வாகம் கேட்டறிந்ததாகவும், அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments