ராமர் சேது பாலம் வழக்கு - சுப்பிரமணியன்சாமியின் மனு மீது 3 மாதம் கழித்து விசாரணை
ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த இடைக்கால மனுவை, 3 மாதங்களுக்குப் பின்னர் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமர் சேது பாலம் இருக்கும் மன்னார் வளைகுடாவில், கப்பல் போக்குவரத்தை நடத்த முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
பாஜக எம்.பி. சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அந்தத் திட்டத்திற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
அப்போதே சேது பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்பிரமணியன்சாமி மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கடந்த 2017 ல் தம்மிடம் ஆலோசனை நடத்தியதாகவும் ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் புதிய இடைக்கால மனு 3 மாதங்களுக்கு பிறகு விசாரணைக்கு வருகிறது.
Comments