வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆயுதம் வழங்க கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு

0 676

வாகன சோதனை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சரிசெய்யும் போது  காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி இருப்பதை உறுதிப்படுத்த கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலர், மற்றும் டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், சோதனைச் சாவடிகளில் காவல்துறையினரிடம் ஆயுதங்கள் இல்லாததால், குற்றவாளிகளால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதாகவும், எனவே வாகன சோதனை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் ஆயுதம் ஏந்தி இருப்பதை உறுதிப்படுத்த, காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு விசாரித்து, இதற்கு தமிழக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments