ஜெயலலிதா நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம் தேதி திறக்க முடிவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம்தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.
10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணியில், 8 பகுதி வேலைகள் முடிந்துள்ளன நடைபாதை, வாகன நிறுத்தம் ஆகிய பணிகளும் முடிவடைந்துள்ளது.
நினைவிடம் அருகில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம், மேற்கூரை அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு அதில் நவீன வடிவமைப்பு பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.
அங்கு ‘பீனிக்ஸ்’ பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓரிரு வாரத்தில் நிறைவடைய உள்ளன. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி நினைவிடத்தை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
Comments