ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 1712

திமுக மற்றும் தி.க.வினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளதை பார்க்கும்போது சங்கடமாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு பூமிபூஜை செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் தான் அமைச்சராகி இருக்க முடியாது என்றார். ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர், அவர் பேசியதில் உள்ள நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என ராஜேந்திர பாலாஜி கூறினார். திமுகவின் முகமூடிதான் தி.க. என்றும், தி.க.வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா என்றும் வினவிய அவர், ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது என்றார்.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள் தேசியவாதிகள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments