ராணுவ பணிகளில் நாட்டுக்காக உயிர்நீத்த விலங்குகளுக்கு போர் நினைவிடம்

0 783

ராணுவ பணிகளில் நாட்டுக்காக உயிர்நீத்த விலங்குகளுக்காக, மீரட்டில் போர் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. 

போரில் ஈடுபடுத்தப்பட்டு உயிரை ஈந்த நாய், குதிரை, கோவேறு கழுதை போன்ற விலங்குகளுக்காக இந்த நினைவிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராணுவ பணிகளில் ஈடுபடுத்துவதற்காக நாய்கள், குதிரைகள், கோவேறு கழுதைகளை வளர்த்து, பயிற்சி அளிக்கும் மீரட் ராணுவ மையத்தில் இந்த போர் நினைவிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் பணியின்போது கொல்லப்பட்ட மான்சி என்ற லாப்ரடார் ரக நாயை சிறப்பிக்கும் வகையில் இந்த போர் நினைவிடம் அமைய உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அனுமதி விரைவில் கிடைத்தவுடன் போர் நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments