சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

0 798

சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடுமையாக்கி தமிழக அரசின் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் குப்பை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குப்பை சேகரிப்பு சேவை கட்டணம், தரம் பிரிக்காமல் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சிக்கு வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்து தரப்பினரும்  ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments