புதர்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரம்மாண்ட பீட்சா
ஆஸ்திரேலியாவில் புதர்த்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 100 மீட்டர் நீளமுள்ள பீட்சா சமைத்து உணவகம் ஒன்று அசத்தியுள்ளது.
சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி (Pellegrini) என்ற இத்தாலியன் உணவகத்தில் இந்த நீண்ட பீட்சாவை 50 ஊழியர்கள் 5 மணி நேரத்தில் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.
சான் மர்சானோ (San Marzano) தக்காளி, சீஸ், துளசி, உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பீட்சா, 400 கிலோ எடைக்கொண்டது.
ஒரு தங்கக் காசுக்கு ஒரு பீட்சா துண்டை விற்று கிடைத்த நிதி, தீயணைப்புத்துறைக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
Comments