அசாம் மாநிலத்தில் 644 தீவிரவாதிகள் சரண்

0 1231

அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சேர்ந்த 644 தீவிரவாதிகள், ஆயுதங்களுடன் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

குவாஹாத்தியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உல்பா, என்டிஎப்பி, ஆர்என்எல்எப், கேஎல்ஓ, சிபிஐ மாவோயிஸ்ட், ஏடிஎப் உள்ளிட்ட 8 தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 644 பேர் சரணடைந்தனர்.

ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அசாமில் அண்மையில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் சரணடைந்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments