மறக்க வேண்டியதை நினைவூட்டியது ஏன்? நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ கேள்வி
பெரியார் விவகார சர்ச்சையை சுட்டிக்காட்டி, மறக்க வேண்டியதை ரஜினி நினைவூட்டியது ஏன்? என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பெரியார் குறித்து நண்பர் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் கூறிய கருத்துக்களை, தி.க. தலைவர் வீரமணி ஆதாரபூர்வமாக மறுத்து இருப்பதாகவும், இதன் பிறகும் வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், “இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்” என்று மட்டும் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் அவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது என கூறியுள்ள வைகோ, இந்த விவகாரத்தை தொடங்கி வைத்தது ரஜினிதான், ஆதலால் அவர்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Comments