ஆந்திர புதிய தலைநகர் அமராவதியில் ஏழைகள் பெயரில் நிலம் வாங்கி மோசடி
தெலுங்கு தேசம் கட்சி ஆண்ட போது ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதியை சுற்றி கோடிக்கணக்கான ரூபாய்க்கு நில மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மையப் பகுதியில், 2014- 15 காலகட்டத்தில் 220 கோடி ரூபாய்க்கு 761 ஏக்கர் நிலம் பரம ஏழைகளின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிலம் 797 நபர்களின் பெயரில் வாங்கப்பட்டாலும் இவர்களில் யாருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக மாத வருமானம் இல்லை என்பதுடன் 529 பேருக்கு பான் அட்டையும் இல்லை என்பதை கண்டுபிடித்த ஆந்திர சி.ஐ.டி. போலீசார், ஏமாற்றுதல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தெலுங்கு தேச முன்னாள் அமைச்சர்கள் புல்லா ராவ், நாராயாணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமலாக்கப்பிரிவு கையில் எடுத்துள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments