சீனாவில் ’கொரோனா வைரஸ்’ பரவ இது தான் காரணமா..?

0 2745

நாய் குட்டி முதல் புனுகுபூனை வரை எந்த காட்டு விலங்கையும் விட்டு வைக்காத சீனர்களின் உணவுப் பழக்கமே கொரோனாவைரஸ் போன்ற உயிர்கொல்லி வைரஸ்கள் பரவ காரணம் என்ற கசப்பான உண்மை வெளிவந்துள்ளது.

கொரோனாவைரஸ் தாக்குதலை அடுத்து, அதன் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவின் உஹான் நகரின் ஹுனான் கடல் உணவு சந்தையை ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு விற்கப்படும் வனவிலங்குகளின் பட்டியலை வெளியிட்டு உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

உயிருள்ள நரி, முதலைகள், ஓநாய்கள், பாம்புகள், எலி, மயில், எறும்புத்திண்ணி, ஒட்டகம், சாலமாண்டர் எனப்படும் பிரம்மாண்டமான பல்லிவகை என நீளும் அந்த பட்டியலில் மொத்தம் 121 காட்டு விலங்குகள் இடம் பெற்றுள்ளன.

காட்டு விலங்குகளை உணவுக்காக கடத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த விலங்குகள்  விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சார்ஸ் எனப்படும் அதிதீவிர சுவாச பாதிப்பை ஏற்படுத்திய வைரசும் காட்டு விலங்குகளில் இருந்து பரவியது  கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது உலக மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ள கொரோனாவைரசும் இந்த சந்தையில் அறுக்கப்பட்ட காட்டு விலங்கு ஒன்றில் இருந்தே பரவியுள்ளது. நோய் தாக்குதலை தொடர்ந்து இந்த சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இதனிடையே மனிதர்களுக்கு புதிது புதிதாக வரும் தொற்று நோய்களில் சுமார் 70 சதவிகிதம், காட்டு விலங்குகள் வாயிலாக பரவுவதாக, அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு சங்க சுகாதாரத் திட்ட இயக்குநர் கிறிஸ்டியன் வால்ஸர் (Christian Walzer) கூறி அதிர்ச்சியை அதிகரித்துள்ளார்.

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments