அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும் -ஜி.கே.வாசன்
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கேட்டு கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் ஆயிரத்து 209 பள்ளிகள் மட்டுமே இருப்பதால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களை அதில் சேர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நினைவுகூர்ந்த ஜிகே வாசன், நாடு முழுவதும் உள்ள ஐந்தாயிரத்து 464 தாலுகாக்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
Comments