காரில் சென்ற நபரை மற்றொரு காரில் மோதி கொல்ல முயன்ற 4 பேர் கைது

0 938

திண்டுக்கல் அருகே காரில் சென்ற நபரை மற்றொரு காரில் சென்று மோதி, கொல்ல முயன்றதாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரைச்சேர்ந்தவர் டேனியல். இவர் திண்டுக்கல்லுக்கு காரில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த 4 நபர்கள், அவரது கார் மீது மோதி இடித்து நிறுத்தி, உள்ளே இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பழனி சென்ற பாதயாத்திரை பக்தர்கள், கூச்சல் போட்டதால் அவர்கள் காரில் ஏறி தப்பினர். தகவல் அறிந்த போலீசார் வாகனத்தில் துரத்தி, கன்னிவாடி அருகே மடக்கி சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள், மணிகண்ட பிரபு, அருண்குமார், விஜயன் ஆகியோரை கைது செய்தனர்.

image

விசாரணையில் பல் மருத்துவம் பயிலும் டேனியலின் மகளை சுரேஷ்குமார் ஒருதலையாக காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்ய பெண் கேட்டபோது, அவர் மறுத்ததால் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments