”அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும்..” மாவீரனின் மாபெரும் ஆசை

0 7325

ளைஞர்களின் மத்தியில் சுதந்திர போராட்ட உணர்வை விதைத்தவர்.ராணுவ பணியில் வேலை பார்க்கும் ஒவ்வொரு இராணுவ வீரரும் இவரை நினைக்காத நாட்களே இருக்க முடியாது.இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரம் செறிந்த வரலாற்று பக்கங்களை திருப்பி பார்க்க நினைத்தால் அதில் தவிர்க்கவே முடியாத பக்கம் சுபாஷ் சந்திர போஸுடையது

நேதாஜியின் சுதந்திர போராட்டம்:

கல்கத்தாவில் படித்து கொண்டிருக்கும் போது இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசியதால் தனது  பேராசிரியர் ஓடென் என்பவரையே தாக்கினார் சுபாஷ்.அதனால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மேல் படிப்பிற்கு லண்டன் சென்ற அவர் ஐ.சி.எஸ் படித்து நான்காவது மாணவனாக தேர்ச்சி பெற்றதால் அங்கு அதிகார பொறுப்புகளை வகித்தார்.

image

ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு தன் லண்டன் பணியை உதறிவிட்டு தாய்நாடு திரும்பி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.நாடு திரும்பிய சுபாஷ் இந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசினார் .”லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவகர்கள் எனது ஷூக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்ததுதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!"

இளைஞர்களின் ஒத்துழைப்பு

“கொஞ்சம் ரத்தம் கொடுங்கள் உங்களுக்கான  சுதந்திர இந்தியாவை நான் மீட்டு தருகிறேன் என்ற வீர முழக்கமே இளைஞர்களை அவர் பக்கமே வரவழைத்தது.இதுவே அவரின் முதல் வெற்றி எனலாம்.1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது” நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார்.

image

தமிழனாக பிறக்க வேண்டும் என்ற ஆசை

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கசப்பால் அதிலிருந்து விலகி தனி கட்சியை ஆரம்பித்தும் , ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்ததால்,  ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சுதந்திர இந்தியாவை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்ற வேட்கையில் மாறு வேடம் பூண்டு சிறையில் இருந்து தப்பித்து சென்று வெளிநாட்டவரின் உதவியை நாடினார் நேதாஜி.

அகிம்சையை துறந்த அவர் ஆயுதப்போராட்டம் மூலமே இந்தியா விடுதலை அடையும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் இந்தியாவுக்காக , சர்வாதிகாரியான ஹிட்லரின் ஆதரவை நாடினார்.

image

சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது.அது ஜப்பானியார்களால் தகர்க்கப்பட்டு மீண்டும் நேதாஜியின் கீழ் கட்டமைக்கப்பட்டது.வலுபெற்ற இந்திய ராணுவத்தில் 600 தமிழர்கள் இருந்தார்களாம். மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கையில் அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறினார்.தன் இயக்கத்திலும் இருந்த பெண்களை சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!

image

இந்திய இராணுவம்:

சிதறிக்கிடந்த இராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சியளித்து அதனை தலைமையேற்று நடத்தினார்.நட்பு நாடுகளின் உதவியுடன் பர்மாவிலிருந்தே இந்திய தேசிய ராணுவ படை மூலம் 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டார்.ஆனால் பல்வேறு காரணங்களால் தோல்வியை தழுவிய இந்திய இராணுவம் முயற்சியை கைவிடவில்லை.இது தற்காலிக தோல்வி மட்டுமே மன சோர்வு அடைந்து விடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என  வானொலி மூலம் உரையாற்றினார்.

ஜெய் ஹிந்த் என்ற வீரமுழக்கம்:

செண்பகராமன்பிள்ளை என்ற தமிழனால் அறிமுகப்படுத்தப்பட்ட சொல்  ஜெய் ஹிந்த்(வெல்க பாரதம்). காஷ்மீர் முதல் குமரி வரை உள்ள இந்தியர்களின் வீரமுழக்கமாக மாற்றிக்காட்டினார் சுபாஷ்

மர்மம் நிறைந்த மரணம்

ஆகஸ்ட் 18 ,1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்து கொண்டிருந்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகில் விபத்துகுள்ளானது.அதில் அவர் இறந்த விட்டார் என்று ஜப்பானிய வானொலியும் அறிவித்து செய்தியை வெளியிட்டது. இந்த நிகழ்வு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.ஆனால் இந்த தகவல் தவறு என்று இன்று வரை மக்கள் நம்பிகொண்டிருக்கிறார்கள்.உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என பல இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

image

நம் நாட்டிற்காக இந்திய இராணுவத்தை உருவாக்கியவரின் மரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது..சரியான தகவல்களை வெளியிடும் நம்பிக்கையில் இன்றும் காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்….

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments