30 ஆண்டுகளில் கோலா கரடிகளின் இனம் அழிந்து போகும் என எச்சரிக்கை

0 988

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் விளைவாக 30 ஆண்டுகளில் கோலா கரடிகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

image

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. அப்பகுதியில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்கான கோலா கரடிகளில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்த நெருப்பில் அழிந்து போனதாக சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டிக்மன் தெரிவித்துள்ளார். அரசின் கவனக்குறைவால் 2050 ம் ஆண்டு வாக்கில் கோலா கரடிகளின் இனமே அற்றுப் போகும் நிலை உண்டாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மழைக்காடுகளில் காணப்படும் கொடிய விஷம் கொண்ட புனல் குழிச் சிலந்திகள் நெருப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துள்ளன. அதிவேகமாகச் செயல்படும் இந்த வகைச் சிலந்திகள் கடித்தால் மனிதனுக்கு மரணமேற்படும் என்பதால் இந்த வகைச் சிலந்திகளிடம் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு நார்த் வேல்ஸ் மாகாண அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments