இன்னும் 2 ஆண்டுகளில் கூவத்தில் படகு ஓடும்.. அமைச்சர் தகவல்

0 1089

சென்னை கூவம் ஆற்றை 2 ஆண்டுகளில் தூய்மைப்படுத்தி படகு போக்குவரத்து தொடங்க 604 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று ஆயிரத்து 414 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கூவம் என்றால் அசுத்தமான ஒரு இடம் என்ற எண்ணத்தை மாற்ற தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதற்கான திட்டம் முழுவதுமாக முடிக்கப்படும். பின்னர் நல்ல நீர் ஓடும் நதியாக கூவம் உருமாறும்.

இதற்காக தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது. இது போல மக்கள் நலனுக்காக பல வளர்ச்சி திட்டங்களை தமிழக அரசு உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments