“காவலன் SOS” செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

0 1082

மதுரையில் இளைஞர் ஒருவர் நடத்தி வரும் பாரம்பரிய உணவகத்தில் காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார்.

பெண்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக காவல்துறையால் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது காவலன் செயலி. இதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அரசு பல வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை பொன்மேனி பகுதியில் பாரம்பரிய உணவகம் நடத்தி வரும் ராஜபிரபு என்கிற இளைஞர், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவு கட்டணத்தில் 10 விழுக்காடு தள்ளுபடி தரப்படும் என அறிவித்துள்ளார்.

செயலி குறித்து அறியாமல் உணவகத்துக்கு வரும் பெண்களுக்கும் அதுகுறித்து விளக்கி, தரவிறக்கம் செய்து தருவதாகக் கூறுகிறார் ராஜபிரபு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments