ரூ.24,000 கோடி மதிப்பிலான 9 நலத் திட்டங்களை துரிதப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு

0 701

24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்கள் தாமதமானது குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

32வது பிரகதி ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. ரயில்வே,சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் ஆகிய துறைகளில்
தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கடந்த முறை பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 269 திட்டங்கள் குறித்து மோடி ஆய்வு செய்துள்ளார்.

மத்திய மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழுவான பிரகதி -மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments