மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் சூழ்ந்த கரும்புகையால் பயணிகள் பீதி
ருமேனியாவில் இருந்து புறப்பட்ட விமானம் வானில் பறந்து கொண்டிருந்போது விமானத்தின் உள்ளே கடும் புகை சூழ்ந்ததால் பயணிகள் பீதிக்கு உள்ளாயினர்.
புகாரெஸ்ட்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் விமானம் சென்று புறப்பட்டது. 169 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் உள்ளே திடீரென கரும்புகை சூழ்ந்ததால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.பயணிகளுக்கு ஆக்ஸிஜன் அடங்கிய முகமூடி வழங்கப்பட்டு ஆட்டோபெனி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments