CAA - க்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டாம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
டாவோசில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிஏஏ என்பது பிரிவினைக்குப் பின்னர் விடுபட்ட சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்றும், யாருடைய குடியுரிமையையும் இது பறிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்காகத்தான் போராட்டம் நடத்துவதாகக் கூறிய அவர், குடியுரிமை சட்டத்தை தேசியப் பிரச்சினையாக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்குள் புதியவர்களை கொண்டு வருவதற்கான சட்டம் அல்ல இது என்று தெளிவுபடுத்திய சத்குரு ஜக்கி வாசுதேவ், எல்லோரையும் அனுமதிக்குமளவுக்கு இந்தியாவில் மக்கள் தொகை குறைவாகவா இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
Comments