சொந்தமாக வாட்ஸ் அப் செயலியை உருவாக்க இந்தியா முடிவு..

0 1431

இந்தியா தனது சொந்த வாட்ஸ் அப் செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்படுகிறது. இதில் பல்வேறு வதந்திகளும் உண்மைக்கு மாறான தகவல்களும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளதால் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது.

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள் மற்றும் துறைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் தகவல் பரிமாற்றங்களுக்கு நம்பகத் தன்மை கூடும். ஆங்கிலம் இந்தி தவிர இதர 11 இந்திய மொழிகளிலும் இந்த ஆப் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது இந்த GIMS செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு, Beta testing போய் கொண்டிருக்கிறது. இந்த சோதனையில் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சிபிஐ, கப்பல்படை, ரயில்வே உட்பட 17 அரசு துறைகள் பங்கேற்றுள்ளன.

தற்போது வரை இந்த Beta testing மூலம் 6,600 பயனர்கள் சுமார் 20 லட்சம் செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளனர் என உயரதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments