சபரிமலை கோவிலில் கடந்த ஆண்டைவிட ரூ.95.35 கோடி அதிகரித்த வருமானம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின்போது 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 16ந் தேதி திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை செவ்வாய்க்கிழமை அதிகாலை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூலம் 263 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்ததைவிட நடப்பாண்டில் 95 கோடியே 35 லட்சம் ரூபாய் அதிகம் கிடைத்துள்ளது.
இதனிடையே இந்த சீசனில் நாணயங்கள் மிக அதிக அளவு குவிந்துள்ளதாக அதிகரிகள் கூறியுள்ளனர். எப்படியும் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிற்கு நாணயங்கள் குவிந்துள்ளதாக கருதப்படுகிறது. இவற்றை எண்ணும் பணி வரும் பிப்ரவரி 5-ம் தேதி துவங்கும் என தேவசம் போர்டு கூறியுள்ளது.
இந்த பணிக்காக 250 முதல் 300 ஊழியர்கள் வரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments