கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

0 1062

ருணை மனு நிராகரிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற மாநில அரசுகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க கோரி உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் மீண்டும் மேல் முறையீடு செய்திருப்பதால் அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது போல் மேல் முறையீடுகள் காரணமாக தண்டனை ஒத்தி வைக்கப்படுவதைத் தவிர்க்க புதிய விதிகளை வகுக்கும்படி  உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்து குற்றவாளிகள் விண்ணப்பிக்க ஏழு நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டால் விரைவாக தண்டனையை நிறைவேற்ற மாநில அரசும் சிறை அதிகாரிகளும் ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

குற்றவாளிக்கான சட்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்த போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதும் முக்கியமானது என்று அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

கொடிய,குரூரமான முறையில் குற்றம் புரிந்தவர்கள் மீது அளவுக்கு அதிகமான கருணை காட்ட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான வழிகாட்டல்களை வகுத்துத் தருமாறும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடக் கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments