ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே 3-வது சுற்றுக்கு தகுதி

0 840

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்நாட்டின் ஆஷ்லேவும் , ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அந்த போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே 2-வது சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3-வது வரிசையில் இருப்பவரும் நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா 2-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஜெங்கை எதிர் கொண்டார். இதில் ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் குரோஷியாவின் பெட்ரா மேட்ரிக், டென்மார்க்கின் வோஸ்னியாக்சி, அமெரிக்காவின் கெனின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments