"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை மாறி உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தகவல்
இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கர் நியூசிலாந்தின் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் 1990-களில் வேகப்பந்து வீச்சு சாதகமான வகையில் இருந்தன என்றார். ஆனால் இப்போது ஆடுகளங்களின் தன்மை மாறி விட்டதாக அவர் கூறியுள்ளார். வெலிங்கடன், நேப்பியர், ஹாமில்டன் ஆடுகளங்கள் இப்போது ரன் குவிக்க ஏதுவான வகையில் மாறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments