வெப்பமயமாதல் குறித்து அதிகம் பேசுவோர் முட்டாள்களின் வாரிசுகள் - அதிபர் டிரம்ப்
புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும், 'தாவோஸ்-உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளை உதிர்த்து வருவதாகவும், அவர்களை நம்பமாட்டோம்,மன்னிக்க மாட்டோம் என்றார்.
இதன் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பேரழிவு பற்றிய கணிப்புகளை எப்போதும் நிராகரிக்க வேண்டும் என்றார். கிரேட்டா தன்பெர்க் கூறுவதைக் கேட்க நேரமில்லை என்ற அவர், புவி வெப்பமயமாதல் குறித்து அதிகம் பேசுபவர்கள், முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும் என்றார். டிரம்பின் இந்த பேச்சுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments