பிறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயதை 102,104 என சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

0 1156

உத்தர பிரதேசத்தில், 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், குழந்தைகளுக்கு 102 மற்றும் 104 வயது என சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் பரேலி மாவட்டம் பேலா கிராமத்தை சேர்ந்த பவன் குமார், தனது நான்கு வயது மகன் சுப், மற்றும் இரண்டு வயது மகன் சங்கெட் ஆகியோருக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு,இணையத்தில் விண்ணப்பித்தார்.

இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க, அந்த கிராம நிர்வாக அதிகாரி சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுனர். ஆனால் லஞ்சம் கொடுக்க பவன்குமார் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த, வி.ஏ.ஓ.,வும் கிராம தலைவரும், சுப்பின் பிறந்த தேதி 6-1-1918 என்றும், சங்கெட்டின் பிறந்த தேதி 13-6-1916 என்றும் குறிப்பிட்டு வழங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் குமார்,நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து அதிகாரிகள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments