தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிசேகத்திற்கான பணிகள் தீவிரம்

0 1688

கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. அந்த கோவிலில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி நடக்கிறது.

இதையொட்டி கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கால யாகபூஜை பிப்ரவரி1- ஆம் தேதி மாலை தொடங்குகிறது.


தற்போது யாக குண்டங்களில் சாமிபடங்கள் வரையும் பணிகளில் ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாகசாலை நடைபெறும் இடங்களில் விநாயகர், முருகன் உள்ளிட்ட சாமி சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments