சிறுவர், சிறுமியருக்கு வீர, தீர செயலுக்கான விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

0 608

டெல்லியில் நடந்த விழாவில் தேசிய வீரதீர செயல் விருதுகளை 22 சிறுவர், சிறுமிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இதற்கான விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்தது. இதில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பிரதான் மந்திரி ராஷ்டீரிய பால் புரஸ்கார் 2020 விருதுகளை வழங்கினார். அவரிடம் இருந்து 12 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் என மொத்தம் 22 பேர் விருதுகளை பெற்று கொண்டனர்.

விருது பெற்றவர்களில் ஒருவனான கேரள சிறுவன் ஆதித்யா, கடந்த ஆண்டு மே மாதம் நேபாளத்தில், பேருந்து ஒன்றில் பயணித்தான். அப்போது பேருந்தில் டீசல் கசிந்து தீ பற்றிய போது, துணிச்சலுடன், அவசரகால கண்ணாடியை உடைத்து பலரை காப்பாற்றினான். இந்த தீரச்செயலுக்காக அவனுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments