கொலம்பியாவில் நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது.
அந்நாட்டின் ஜனாதிபதி இவான் டியூக்கின் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துவது இடது சாரி போராட்டக்காரர்களுடனான சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் பொகோட்டாவில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை வீசி அப்புறப்படுத்தினர்.
Comments