1.98 கோடிக்கும் அதிக குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, ரூ. 1000 வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

0 721

ஒரு கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அமைச்சர் காமராஜின் அறிக்கையில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை குடும்ப அட்டைகள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதனைத் தொடர்ந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைகள், 18 ஆயிரத்து 886 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் உட்பட மொத்தம் 1 கோடியே 98 லட்சத்து 34 ஆயிரத்து 221 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய், அரிசி, சர்க்கரை, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments