ரஜினிக்கு எதிராக திராவிட விடுதலை கழகம் மேலும் ஒரு புதிய வழக்கு
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து ரஜினி பொய்யான தகவலை பரப்பி களங்கம் ஏற்படுத்தியதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் கோவை காட்டூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.
ரஜினி மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஏற்கனவே ஒரு வழக்கு திராவிட விடுதலைக் கழகம் சார்பில் தொடரப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments