நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

0 1009

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பொங்கல் விடுமுறையால் செயல்பட தாமதமான நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாகவே நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இனி பயிற்சி வகுப்புகள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் பொது தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ரஜினியின் சில கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுகவினர் பெரியார் வழியில் செல்பவர்கள் என குறிப்பிட்டார். அடித்தட்டு மக்களுக்காக பெரியார் வழியில் அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்றார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments