அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை

0 1239

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களமாவூர் அடுத்த காரப்பட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இது தொடர்பான முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த தந்தை மகன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கிருஷ்ண மூர்த்தி 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

image

இன்று காலை டீ கடை ஒன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற மர்ம கும்பல் கிருஷ்ண மூர்த்தியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. எஸ்.பி அருண் சக்திகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். தந்தை மகன் கொலைக்கு பழிக்கு பழியாகவே கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments