அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் இல்லை - தொடக்கக் கல்வி இயக்ககம்

0 938

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களிடம் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களிடம் பொதுத் தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

image

ஆனால் 8 ஆம் வகுப்பு மாணவர்களிடம் 200 ரூபாயும், 5 ஆம் வகுப்பு மாணவர்களிடம் 100 ரூபாயும் கட்டணமாக வசூலித்து பொதுத் தேர்வு செலவுகளுக்கு பயன்படுத்த தனியார் பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்துக்கு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் 8-ம் வகுப்பிற்கும், 28-ம் தேதிக்குள் 5-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments