ஜெஃப் பெசோஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம் - பட்டத்து இளவரசருக்கு தொடர்பில்லை என சவுதி அரேபிய மறுப்பு

0 1099

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் தொலைபேசி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் பட்டத்து இளவரசர்  முகமது பின் சல்மான்  இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி அறிக்கை அபத்தமானது என்று சவுதி அரேபியா கூறி உள்ளது.

பெசோஸின் தொலைபேசியில் ஊடுருவ, இளவரசர் முகமது பின் சல்மான் ஒரு தீங்கிழைக்கும் வாட்ஸ்அப் வீடியோவை அனுப்பினார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது.

image

அந்த வீடியோவை அனுப்பிய பின்னர் பெசோஸின் தொலைபேசியில் இருந்து பெரிய அளவிலான தகவல்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சவுதி அரேபிய அரசு, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

பெசோஸிற்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கட்டுரையாளரும், சவூதி பத்திரிகையாளருமான ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டதில் இருந்து பெசோஸ் மற்றும் சவுதி அரசுக்கு இடையேயான உறவு மோசமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments